காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
அமெரிக்காவில் நடந்து சோகம்... நடுக்கடலில் கவிழ்ந்த படகு... மரண ஓலமிட்ட பயணிகள்..!

ஃப்ளோரிடா மாகாணத்தில் படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியது.
புளோரிடாவின் லிட்டில் டார்ச் கீ கடற்கரையில் இருந்து 50 மைல் தொலைவில் அகதிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த படகு ஒன்று நீரில் மூழ்கியது. இந்த கோர விபத்தானது மோசமான வானிலை காரணமாகவே நிகழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அமெரிக்க கடலோர காவல் படையினர் நீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 9 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் கடலில் மூழ்கி மாயமான 5 பேரை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.