உலகம் லைப் ஸ்டைல் டெக்னாலஜி

ஆள விடுங்கடா சாமி..! தொடர் இம்சைகளால் சீனாவை விட்டு வெளியேறும் டிக்டாக் நிறுவனம்..! புது நிர்வாக குழு அமைக்கவும் திட்டம்..!

Summary:

Tik tok parent company byte dance planes to shift head quarters

இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த மாதம் நடந்த எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து இரண்டு நாடுகளும் இடையே எல்லை பிரச்சனை தீவிரமடைந்தது. இந்நிலையில் டிக்டாக், ஹெலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்தது.

இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்திய அரசு இந்த அதிரடி முடிவை எடுத்தது. இந்நிலையில் எந்த ஒரு பயனாளரின் தகவலையும் தாங்கள் தவறாக உபயோகிக்கவில்லை எனவும், தகவல்களை சீனாவிடம் பகிர்ந்துகொள்ளவில்லை எனவும், சீன அரசே தகவல்களை கேட்டாலும் நாங்கள் தரப்போவதில்லை எனவும் டிக் டாக் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய அரசு சீன செயலிகளை தடை செய்ததை அடுத்து அமெரிக்காகவும் டிக் டாக் செயலியை தடை செய்வது குறித்து ஆலோசித்துவருகிறது. ஆஸ்திரேலியாவிலும் டிக் டாக் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படி பல்வேறு நாடுகள் டிக் டாக் செயலுக்கு எதிராக போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளது.

டிக் டாக், ஹலோ செயலிகளின் தலைமை நிறுவனமான பைட்டான்ஸ் சீனாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருவதாலையே அந்நிறுவனத்துக்கு இத்தனை எதிர்ப்புகள் கிளம்பிவருவதாக கூறப்படுகிறது. இதனால் பைட்டான்ஸ் நிறுவனம் தனது தலைமையகத்தை சீனாவிலிருந்து வேறு நாட்டுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவுக்கு வெளியே புது நிர்வாக குழுவை உருவாக்கவும் பைட்டான்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


Advertisement