உலகம் டெக்னாலஜி

டிக் டாக் செயலிக்கு அடுத்த அடி: பாகிஸ்தானில் டிக்டாக் செயலிக்கு திடீர் தடை: காரணம் இதுதான்!

Summary:

டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தான் அரசு திடீர் தடை விதித்துள்ள சம்பவம் டிக் டாக் நிறுவனத்தை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தான் அரசு திடீர் தடை விதித்துள்ள சம்பவம் டிக் டாக் நிறுவனத்தை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆரம்பித்துவைத்த இந்தியா:

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ள செயலிகளில் ஒன்று டிக் டாக். பல கோடி வாடிக்கையாளர்களை கொண்ட டிக் டாக் செயலி கடந்த சில மாதங்களாக கடும் நெருக்கடியை சந்தித்துவருகிறது. முன்னதாக இந்திய நாட்டின் இறையாண்மை மற்றும் பயனர்களின் தகவல்களுக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி இந்திய அரசு டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்தது.

ஆட்டம் காட்டிய அமெரிக்கா:

இதனை அடுத்து அமெரிக்காவும் டிக் டாக் செயலியை அந்நாட்டில் தடைசெய்யபோவதாக அறிவித்தது. இதனிடையே டிக் டாக் நிறுவனம் Oracle நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்ததை அடுத்து அமெரிக்காவில் டிக் டாக் தடை தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்தமாதம் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தடை:

இந்நிலையில் டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தான் அரசு திடீர் தடை வித்துள்ளதுள்ளது. டிக் டாக் செயலி மூலம் பரப்பப்படும் முறைகேடான வீடியோக்களை காரணம் கூறி பாகிஸ்தான் அரசு டிக் டாக் செயலியை தடை செய்துள்ளது.

பல்வேறு விதமான தவறான வீடியோக்கள் டிக் டாக் செயலி மூலம் பகிரப்படுவதாக அரசுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எண்ணற்ற புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நாட்டு தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது. இந்த திடீர் தடை குறித்து டிக் டாக் நிறுவனம் இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.


Advertisement