மீண்டும் வெடித்தது போராட்டம்!.. கொழும்புவில் கூடிய போராட்டக்காரர்கள்!,, திணறும் இலங்கை அரசு..!

மீண்டும் வெடித்தது போராட்டம்!.. கொழும்புவில் கூடிய போராட்டக்காரர்கள்!,, திணறும் இலங்கை அரசு..!



The protests erupted again as protesters gathered in Colombo

இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து கடந்த சில மாதங்களாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அந்நாட்டில் வரலாறு காணாத அளவில் அதிகரித்தது. இதனால் இலங்கை மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளானார்கள்.

இதனையடுத்து அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமடைந்தது. இதன் காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அதன்பிறகு இலங்கையில் போராட்டங்கள் ஓய்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இதன் பின்னர் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி அந்நாட்டு மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இலங்கையில் தற்போது மீண்டும் போராட்டம் துவங்கியுள்ளது . கொழும்பு நகரில் உள்ள பல்வேறு பகுதிகளை உயர் பாதுகாப்பு வளைய பகுதிகளாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இதற்கு அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனையடுத்து சோசியலிச இளைஞர் சங்கத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் கொழும்பு சுகாதார அமைச்சகம் அமைந்துள்ள பகுதியில் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடர்பாக 4 பெண்கள் உட்பட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.