உலகம்

12ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த பச்சிளம் குழந்தை.! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த ஆச்சர்யம்.! பதறவைக்கும் வீடியோ.!

Summary:

12ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த 2வயது குழந்தையை அப்பக்கம் வந்த டெலிவலரி பாய் கேட்ச் பிடித்துள்ளார்.

வியட்னாமில் உள்ள மிகப்பெரிய அப்பார்ட்மெண்டில் 12ஆவது மாடியில் உள்ள ஒரு பால்கனியில் 2 வயது குழந்தை தடுமாறி கீழே விழுந்துள்ளது. சுமார் 68 அடி உயரத்தில் இருந்து குழந்தை கீழே விழுந்துள்ளது. அப்போது அந்த அப்பார்ட்மெண்டிற்கு வந்த டெலிவரி பாய் குழந்தை பால்கனியில் இருந்து கீழே விழுவதற்கு முன்பு குழந்தையை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அந்த குழந்தை 12 வது மாடியின் ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு அழுததை பார்த்ததும், குழந்தை கீழே விழுந்தால் எந்த இடத்தில் விழும் என்பதை உடனே கணக்கிட்டு அந்த கூரையின் மீது ஏறி நின்றுகொண்டார் அந்த டெலிவரி பாயான இளைஞன். அவர் நினைத்தது போலவே அந்த குழந்தை கத்திக்கொண்டே விழுந்ததும் அவர் திட்டமிட்டபடியே கேட்ச் பிடித்துவிட்டார்.

அந்த குழந்தை அதிக உயரத்தில் இருந்து விழுந்ததால் உடலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது அந்த குழந்தை. கண்ணிமைக்கும் நேரத்தில் சரியான முடிவை எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய அந்த டெலிவரி பாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அந்த அப்பார்ட்மெண்டில் நடந்த இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, அக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. 


Advertisement