அடிக்கடி திட்டிய முதலாளி... கத்தியால் நெஞ்சில் குத்தி வஞ்சம் தீர்த்த தொழிலாளி....!

அடிக்கடி திட்டிய முதலாளி... கத்தியால் நெஞ்சில் குத்தி வஞ்சம் தீர்த்த தொழிலாளி....!


the-boss-who-often-scolded-the-worker-who-solved-the-fr

காவலாளி ஒருவர் தன்னுடைய முதலாளியை நெஞ்சிலேயே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தாய்லாந்தில், சாவத் ஸ்ரீராட்சலாவ் (44) என்ற காவலாளி அரோம் பனன் (56) என்பவரின்  நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சாவத்திடம் அரோம் எப்போதும் கண்டிப்புடனும் கடுமையான சொற்களை பயன்படுத்தி திட்டுவதுமாக இருந்துள்ளார். மேலும் பல மணிநேரம் வேலையும் பார்க்க வைத்துள்ளார். 

இவையெல்லாம் சாவத்தின் மனதில் ஆத்திரத்தை உண்டாக்க, தனது முதலாளி ஆரோமின் நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்து தகவலிறிந்த தாய்லாந்து காவல்துறையினர் சாவத்தை கைது செய்தனர்.

நெஞ்சில் கத்தியால் குத்துபட்ட ஆரோமை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாவத் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.