வேட்டையனை வைத்து வசூல் வேட்டையில் ரோகினி திரையரங்கம்?.. டிக்கெட் விலை ரூ.390/- மட்டுமே..!
வான் சாகசம் செய்ய முயற்சித்து நடந்த சோகம்; 29 வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் உடல் சிதறி பலி.!
தாய்லாந்து நாட்டில் உள்ள ஸ்கை டவர் மீது ஏறிய பிரிட்டிஷ் ஸ்கை டைவர் நாத்தி ஒடின்சன் (வயது 33). இவர் சமீபத்தில் சுற்றுலாவுக்கு சென்ற நிலையில், அங்கு வான் சாகசம் செய்ய முயற்சித்துள்ளார்.
ஸ்கை டவரின் 29வது மாடிக்கு சென்றவர், அங்கிருந்து கீழே குதித்தார். அப்போது, அவரின் பாராசூட் எதிர்பாராத விதமாக வேலை செய்யவில்லை.
இதனால் கீழே குதித்த வேகத்தில் தரையில் மோதி, உடல் சிதறி நாத்தி பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தாய்லாந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.