உலகம் லைப் ஸ்டைல்

20 இளம் பெண்களுடன் தனி ஹோட்டலில் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்ட தாய்லாந்து மன்னர்.!

Summary:

Thai King books entire German hotel with a harem of 20 women

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், ஹோட்டல் ஒன்றை முழுவதும் வாடகைக்கு எடுத்து 20 இளம் பெண்களுடன் சேர்ந்து தன்னை தனிமைப்படுத்தியுள்ளார் தாய்லாந்து மன்னர்.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனா பாதிப்பால் தாய்லாந்து நாட்டில் 1,651 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், 10 பேர் இதுவரை கொரோனோவால் உயிர் இழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தீவிரமடைவதை அடுத்து, அந்நாட்டு மன்னர் ராமா எக்ஸ் ஜெர்மனியின் ஜூக்ஸ் ஸ்ப்லிட்ஸ் மலையடிவாரத்தில் உள்ள, ஒரு பிரமாண்ட ஹோட்டல் முழுவதையும் வாடகைக்கு எடுத்து, தனக்கு துணையாக 20 இளம் பெண்களுடன் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார்.

மன்னரின் இந்த செயலை விமர்சித்தால் சிறைத்தண்டனை வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், ஆபத்தான நேரத்தில் மக்களை கண்டுகொள்ளாமல் மன்னர் இப்படி செய்ததை தாய்லாந்து மக்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Advertisement