வீடு முழுக்க கேமாரா... என்கிட்ட இருந்து நீ தப்ப முடியாது! 120 ஆண்களுடன் ஆபாசமாக....இறுதியில் நடந்த ட்விஸ்ட்! வெளியான பகீர் பின்னணி..!!!
ஸ்வீடனில் பல ஆண்டுகளாக மனைவியை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 61 வயது நபருக்கு மாவட்ட நீதிமன்றம் 4 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ரகசியமாக போலீசாரை தொடர்புகொண்டு தப்பிய சம்பவம் தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனிமைப்படுத்தி கட்டுப்பாட்டில் வைத்த கணவன்
ஸ்வீடனின் க்ராம்ஃபோர்ஸ் பகுதியில் உள்ள தனிமையான பண்ணை வீட்டில் 2022 முதல் இந்த நடவடிக்கைகள் நடைபெற்றதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின்படி, தனது மனைவியை சமூகத் தொடர்புகளிலிருந்து முற்றிலும் பிரித்து வைத்ததுடன், போதை மாத்திரைகளையும் வழங்கி அவரது வாழ்க்கையை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், வீடு முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு அமைப்புகளை பொருத்தி, ஒவ்வொரு அசைவையும் தொடர்ந்து கண்காணித்துள்ளார். தனது உத்தரவுகளை ஏற்காவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவேன் என மிரட்டி, 120-க்கும் மேற்பட்ட ஆண்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: 120 பேருடன் உடலுறவு.... மனைவிக்கு போதை மருந்து கொடுத்து கணவன் செய்த கொடூரம்! மிரட்டல் மூலம் வெளிச்சத்துக்கு வந்த பகீர் பின்னணி!!!
ரகசிய தகவலால் வெளிச்சத்துக்கு வந்த கொடுமை
அக்டோபர் 2025-இல், கேமராக்கள் பதிவு செய்ய முடியாத ஒரு பகுதியைப் பயன்படுத்தி அந்தப் பெண் அவசர உதவி மையத்துக்கு ரகசியமாக தகவல் அனுப்பியுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
விசாரணையின் போது, அனைத்தும் பரஸ்பர சம்மதத்துடன் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் வாதிட்டார். ஆனால் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிமன்றம் அந்த வாதத்தை நிராகரித்து, பாலியல் சுரண்டல் மற்றும் கொடுமைப்படுத்தல் உள்ளிட்ட குற்றங்களில் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
வாடிக்கையாளர்களுக்கும் தண்டனை
தீர்ப்பின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் குரோனா இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 29 வாடிக்கையாளர்களில் 28 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, அவர்களுக்கும் சிறை மற்றும் நன்னடத்தை தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு மற்றும் மிரட்டல்களால் சூழப்பட்ட நிலையிலிருந்தும் தப்பித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்த பெண்ணின் துணிச்சல் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் குடும்பத்தினரால் மேற்கொள்ளப்படும் மறைமுக கட்டுப்பாடுகள் குறித்து இந்த வழக்கு மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.