தன் திருமணத்திற்கே செல்ல முடியாமல் பாஸ்போர்ட்டை தொலைத்த இந்தியர்,ஒரே டீவீட்டால் அதிரடி நடவடிக்கை எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர்.!

தன் திருமணத்திற்கே செல்ல முடியாமல் பாஸ்போர்ட்டை தொலைத்த இந்தியர்,ஒரே டீவீட்டால் அதிரடி நடவடிக்கை எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர்.!



sushma-swarjaj-helped-indian-to-get-passport

திருமணத்திற்கு செல்ல வேண்டிய நிலையில் அமெரிக்காவில் தன்னுடைய பாஸ்போர்ட்டை தொலைத்த இந்தியருக்கு  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாஸ்போர்ட் கிடைக்க உதவி செய்துள்ளார். 

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான தேவதா ரவி தேஜாவிற்கு ஆகஸ்ட் 
13 ந்தேதி சொந்த  ஊரில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ரவி தேஜா தனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டார். 

   sushma swaraj

இந்நிலையில் இது குறித்து ரவி தேஜா  சுஷ்மா சுவராஜிடம் டிவிட்டரில் ''நான் வாஷிங்டனில் என்னுடைய பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டேன். எனக்கு ஆகஸ்ட் 13-15ல் திருமணம் இருக்கிறது. ஆகஸ்ட் 10-ல் கிளம்ப வேண்டும். என்னுடைய பாஸ்போர்ட்டை தட்கல் முறையில் கிடைக்க உதவி செய்தால் திருமணத்திற்கு செல்ல முடியும். உங்கள் மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளேன். உதவுங்கள்'' என்றுள்ளார்.

இதற்கு சுஷ்மா சுவராஜ், ''தேவதா ரவி தேஜா, நீங்கள் முக்கியமான நேரத்தில் உங்கள் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டீர்கள். இருப்பினும் உங்கள் திருமணத்திற்கு நீங்கள் சரியாக செல்லும் படி நாங்கள் உதவுவோம்'' என்றுள்ளார். 

மேலும் இந்திய தூதரகத்திடமும் அவருக்கு  உதவும்படி உத்தரவிட்டுள்ளார். 




இதையடுத்து வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் , தேவதாவிடம், ஒரு மெயில் ஐடியை அளித்து இந்த மெயில் ஐடிக்கு உங்கள், விண்ணப்ப விவரங்களை அனுப்புங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் அவருக்கு விரைவில் பாஸ்போர்ட் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவருக்கு இன்னும் 5 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். என்று கூறப்பட்டுள்ளது.