150 ஆண்டுகளுப்பின் மெகா விளைவு.. மக்களே கவனம்.. உஷாரய்யா உஷாரு.!



Summer Carrying Tips and Mega El Nino Effect Boost Caution of Heatwave 

மெகா எல்நினோ விளைவு காரணமாக கோடையின் வெப்ப அலையில் கவனமாக இருக்க வேண்டும். 

தொடரும் வெப்ப அலை:

Mega El Nino Effect Heatwave:  இந்தியாவில் மே மாதத்தின் இறுதி வாரம் கோடைகாலத்தில் உச்ச தாண்டவமாக இருக்கிறது. சூரியன் தனது கோர முகத்தினை காண்பித்து வரும் நிலையில், மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தணிந்திருந்த வெப்பநிலை தீவிரமாக சுட்டெரித்து வருகிறது. ஒருசில நகரங்களில் வெப்பநிலை 45 டிகிரி முதல் 48 டிகிரி வரை செல்கிறது. இதனை மக்கள் தாங்கிக்கொள்ள இயலாத வெப்பம் என தவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: போட்டுத்தாக்கும் வெயில்.. பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை.. முழு விபரம் இதோ.!

40 டிகிரி வரை தாங்கும்:

அறிவியல் ரீதியாக இவ்வாறான வெப்ப நிகழ்வுகளை காலநிலை மாற்றத்துடன் சுகாதார பேரழிவையும் தொடர்புபடுத்தி ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதாவது, ஒரு ஆரோக்கியமான மனித உடல் 35 முதல் 40 டிகிரி வரை வெப்பத்தை தாங்கும். 40 டிகிரியை தாண்டும்போது, உடல் தன்னைத்தானே குளிர்விக்க உழைக்கும். காற்றின் ஈரப்பதம் குறைவு, வறண்ட வெப்பம் நிலவினால் தண்ணீர் குடித்து நிழலில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் 45 முதல் 50 டிகிரி வரை சில நிமிடங்களுக்கு தாக்குப்பிடிக்க முடியும்.

summer tips

உள்ளுறுப்பு பாதிக்கும்:

அதுவே 50 டிகிரியை தாண்டினால் மனித உயிர் வாழ்வுக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும். மனிதனின் உடல் எப்போதும் சாதாரணமாக 36.5 முதல் 37.5 வரையிலான வெப்பத்துடன் இருக்க வேண்டும். வெளிப்புற வெப்பம் அதிகரிக்கும் போது, மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதி செயல்பட்டு தோலுக்கு ரத்த ஓட்டம் வழங்கி வியர்வை உற்பத்தியாகும். வியர்வை காற்றில் ஆவியாகும்போது உடலின் உட்புற பகுதி குளிர்ச்சியாகும். 35 டிகிரி வெப்பநிலையில் 100% ஈரப்பதம், 46 டிகிரி வெப்பநிலையில் 50% ஈரப்பதம் மனிதர்களுக்கான வெப்ப நிலை உச்ச வரம்பு ஆகும். உடலின் உறுப்புக்கள் 40 டிகிரியை தாண்டி தன்னைத்தானே குளிர்விக்க இயலாமல் போனால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படலாம்.

summer tips

கவனம் தேவை:

அதிக வெப்பம் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் குழப்பம், தெளிவில்லாத பேச்சு, சுயநினைவு இழப்பு போன்றவை ஏற்படும். இதயம் மிகவேகமாக செயல்படும். இதனால் மாரடைப்பும் ஏற்படலாம். நீர்சத்து குறைபாடு இரத்தத்தை கெட்டியாகும். இதனால் சிறுநீரகம் நச்சுக்களை வடிகட்ட இயலாமல் தவிக்கும். உடலின் புரதங்கள் கொதித்து செல்களை அழிக்க தொடங்கும். தற்போது 150 ஆண்டுகளுக்குப்பின் மெகா எல் நினோ விளைவு ஏற்படும் நிலையில், வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எலுமிச்சை சாறு. மோர் ஆகியவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும். 

இதையும் படிங்க: கோடையில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்.. இதையெல்லாம் தப்பித்தவறியும் சாப்பிடாதீங்க.!