அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
குடிநீர் குழாய் பள்ளத்தில் விடுதலை புலிகள் அமைப்பு பெண்ணின் சடலம்; இலங்கையில் பகீர் சம்பவம்.!
இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் உள்ள கொக்கு தொடுவாயில் குடிநீர் குழாய் பறிக்க குழி தோண்டி உள்ளனர். அப்போது பச்சை நிற பெண் உள்ளாடைகளுடன் மனித எலும்புகள் கிடைத்துள்ளன. இவை விடுதலை புலிகளின் உடையாக இருக்கலாம் என்று சந்தேகத்தில் இருக்கின்றனர்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு இந்த காவல் துறையினர் எலும்புகளையும், ஆடைகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசு கடந்த காலத்தில் நடந்த அடக்குமுறையை எதிர்த்து போரிட்ட தமிழ் இனம் இரத்தம் சிந்தி மாண்டுபோனது.
அவர்களின் உடல்களை கிடைத்த இடங்களில் அரசு புதைத்து சென்றது. சில அப்படியே விட்டு செல்லப்பட்டன. அவ்வாறாக புதைக்கப்பட்ட தமிழ் பெண்ணின் உடலாக அது இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.