உலகம் லைப் ஸ்டைல்

26 வயது இளைஞரோடு குடும்பம் நடத்திய 65 வயது பாட்டி; இறுதியில் நேர்ந்த சோகம்.!

Summary:

srilanka - 65 years old lady - 26 years youth

ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவர் டயன் டீ(65). பணக்கார பெண்மணியான இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். அவரை இலங்கையின் பல்வேறு இடங்களுக்கு சுற்றிக் காண்பிக்கும் வாய்ப்பு 26 வயது நிறைந்த உள்ளூர்வாசி பிரியஞ்சன் டி ஸோசாவுக்கு கிடைத்துள்ளது.

சென்ற இடங்களிலெல்லாம் பிரியஞ்சனுக்கு டயன் டீ தாராளமாக செலவு செய்துள்ளார். இதனால் பிரியஞ்சன் அவரிடம் அன்பாக பேசி பழகியுள்ளார். இது அந்தப் பெண்மணிக்கு மிகவும் பிடித்துப்போக பிரியஞ்சன் மீது காதல் வயப்பட்டுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரியஞ்சன் டயன் டீயிடம் இருந்து பணம் ஏராளமாக கறந்து உள்ளார்.

ஒரு கட்டத்தில் சுற்றுலா முடிந்து ஸ்காட்லாந்து திரும்பிய அவரால் இளம் வயது காதலரை பிரிந்து இருக்க முடியவில்லை. உடனடியாக இலங்கை திரும்பிய அவர் இலங்கையிலேயே செட்டிலாகி பிரியஞ்சனோடு குடும்பம் நடத்தியுள்ளார். ஏற்கனவே பிரியஞ்சன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானவர் என்று தெரிந்தும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த விஷயம் கேள்விப்பட்டு பொறாமைப்பட்ட நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் பிரியஞ்சனை சக நண்பன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுவிட்டான். இதனால் பிரியஞ்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். 

இந்நிலையில் பிரியஞ்சனின் தோழர்கள் சிலர் டயன்டீ யை தொந்தரவு செய்து பிரியஞ்சன் இருந்த இடத்தில் தன்னை வைத்துக்கொள்ளுமாறு டார்ச்சர் செய்ய துவங்கினர். இதனால் பயந்து ஸ்காட்லாந்திற்கே ஓடிவிட்டார். அதன் பின்னர் தான் பிரியஞ்சனும் தன்னிடம் காசுக்காக மட்டுமே பழகியுள்ளான் என்பதை டயன் டீ உண்ர்ந்துள்ளார். இந்த செய்தி தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


Advertisement