ஸ்மார்ட் ஹெல்மெட்: 5 மீட்டர் தூரத்தில் இருந்தாலே காய்ச்சல் இருக்கா இல்லையானு சொல்லிடும்.!

ஸ்மார்ட் ஹெல்மெட்: 5 மீட்டர் தூரத்தில் இருந்தாலே காய்ச்சல் இருக்கா இல்லையானு சொல்லிடும்.!



Special helmet for finding corono affected people

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் 40 கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இதுவரை 4000 கும் அதிகமான மக்கள் உயிர் இழந்துள்ளனர்.

இந்நிலையில், காய்ச்சல் பாதித்தவர்களை கூட்டத்தில் எளிதில் கண்டறியும் வகையில், ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பிரத்யேக ஹெல்மெட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஷென்ஷென் (Shenzhen) பகுதியை சேர்ந்த குவான் ஜி (Kuang-chi) என்ற நிறுவனம்.

corono

இந்த ஹெல்மெட்டை அணிந்துகொள்வதன் மூலம் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களின் உடம்புச்சூட்டினை இதில் இருக்கும் கேமிரா மூலம் அறிந்துகொள்ளலாம். பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஹெல்மெட்டில் இருக்கும் இன்பரா - ரெட் என்ற கேமிராவானது 5 மீட்டர் சுற்றளவில் இருக்கும் நபர்களின் உடல் சூட்டினை துல்லியமாக காண உதவுகிறது.

பீப்பிள்ஸ் டெய்லி என்ற நிறுவனம் சீனா போலீசார் இந்த ஹெல்மெட்டை அணிந்து ரோந்து பணியில் ஈடுபடும் காட்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.