ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
அகதிகளுடன் கடலில் கவிழ்ந்த படகு... 61 பேர் பரிதாப மரணம்.. நெஞ்சை பதறவைக்கும் துயரம்..!
வடக்கு ஆப்ரிக்காவில் இருக்கும் லிபியா நாட்டில் இருந்து ஆப்ரிக்கா, நைஜீரியா, காம்பியா நாடுகளை சேர்ந்த அகதிகள், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல படகில் பயணம் செய்துள்ளனர்.
இவர்கள் ஆபத்தான கடல்வழி பயணம் மேற்கொள்வதால், சிலநேரம் பெரும் மரணங்கள் ஏற்படுவதும் உண்டு. இந்நிலையில், சமீபத்தில் 86 பேர் கொண்ட அகதிகள் குழு ஐரோப்பா புறப்பட்டு இருந்தது.
படகில் கடல்வழிப்பயணம் மேற்கொண்டபோது, நீண்ட அலைகள் தாக்குதலால் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.
எஞ்சிய 61 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடலை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் உட்பட பலரும் உயிரிழந்துள்ளனர் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளளது.