உலகம் லைப் ஸ்டைல்

சுவர் மீது ஏறிய உடும்பு‌..! லபக் என பிடித்து கபக் என வாயில் போட்ட பாம்பு..! வைரலாகும் புகைப்படம்..!

Summary:

Snake catch lizard in Australia photo goes viral

ஆஸ்திரேலியா நாட்டில் மலைப்பாம்பு ஓன்று உடும்பை விழுங்கும் சம்பவம் புகைப்படமாக பதிவாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. உணவுக்காக காட்டு விலங்குகள், உயிரினங்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வருவது ஆஸ்திரலிய நாட்டில் வழக்கமான ஓன்று.

அந்த வகையில் ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள குவின்ஸ்லாந்து என்னும் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், முதியவர் ஒருவர் வசிக்கும் வீட்டின் முன்புறம் மலைப்பாம்பு ஓன்று உடும்பை பாதி விழுங்கிய நிலையில் தொங்கிக்கொண்டிருந்துள்ளது. மிகவும் பலம்வாய்ந்த உடும்பை முழுவதும் உண்ணவும் முடியாமல், கீழே விடவும் முடியாமல் அந்த பாம்பு தவித்துள்ளது.

இந்த சம்பவத்தை வீட்டில் இருந்த அந்த முதியவர் புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் செம வைரலாகிவருகிறது.


Advertisement