#Video : பாம்பை வைத்து சேட்டை.. ஆணுறுப்பை கவ்வி, நாகராஜன் காட்டிய மரண பயம்.!



snake bites indonasia men private part viral video

சாகச விடீயோக்கள்

சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் பல்வேறு விஷயங்களை செய்து தங்கள் உயிரைக்கூட இழக்கும் நிலை ஏற்படுகிறது. ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பது, வனவிலங்குகள் சரணாலயங்களுக்கு சென்று அவற்றை துன்புறுத்தி அல்லது ஏதாவது சாகசம் செய்து வீடியோ பதிவு செய்து வெளியிட்டு லைக் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆபத்தை உணருவதில்லை

சில நேரங்களில் இது அவர்களது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கிறது. இருந்தாலும், லைக்ஸ் மோகத்தால் மக்கள் இவ்வாறு ஈடுபடுவதை நிறுத்துவதில்லை. அந்த வகையில், இந்தோனேசியாவை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமாக இருக்கும் ஒரு இளைஞர் ஒரு பாம்பை கையில் வைத்துக் கொண்டு வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.


ஆணுறுப்பை கவ்விய பாம்பு

அவர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த பாம்பு அவரது ஆணுறுப்பை கவ்வியது. அவரும் அந்த பாம்பை அங்கிருந்து எடுக்க எவ்வளவோ முயற்சி செய்துள்ளார். ஆனால் முடியவில்லை, இதனை தொடர்ந்து அவரது நிலைமை தாறுமாறாக அப்படியே சரிந்து அமர்ந்து விட்டார்.

கிண்டல் கமெண்டுகள்

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து லைக்குகளுக்கு ஆசைப்பட்டு உயிரை விட துணிந்தாயே என்று கிண்டலாக பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.