ப்பா.. செம தில்லுதான் இந்த பாப்பாவுக்கு! பாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமி! வீடியோ இதோ!!

ப்பா.. செம தில்லுதான் இந்த பாப்பாவுக்கு! பாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமி! வீடியோ இதோ!!


small-child-play-with-snake-video-viral

பாம்புகள் என்றால் படையும் அஞ்சும் என்பர். எவ்வளவு பெரிய மாவீரர்களாக இருந்தாலும் பாம்புகளை கண்டால் தங்களை அறியாமல் பதட்டம், நடுக்கம் கொள்ளாதவர்கள் கிடையாது. இந்நிலையில் அண்மைகாலமாக சமூக வலைதளங்களில் பாம்புகள் குறித்த வீடியோக்கள் பெருமளவில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில் தற்போது குட்டி சிறுமி ஒருவர் பெரிய ரக பாம்புடன் ஜாலியாக செல்லமாக கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அரைனா என்ற சிறுமி சிறுவயது முதலே பாம்புகளுடன் பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் அரைனா பெரிய ரக மலைப்பாம்புடன், கொஞ்சி ஜாலியாக விளையாடியுள்ளார். அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது தற்போது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது. மேலும் அந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் சிறுமியின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.