உலகம்

ஊஞ்சல்கட்டி உற்சாகமாக விளையாடிய சிறுமிகள்! கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த விபரீதம்! துயர சம்பவம்!

Summary:

Sisters death by bricks pillar crashed

அமெரிக்கா ஓஹியோ என்ற பகுதியில் 14 வயது நிறைந்த ஸ்கௌட் ஸ்கேராவில்லி மற்றும் 12 வயது நிறைந்த சேஸி ஸ்கேராவில்லி என்ற அக்கா, தங்கை இருவர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வீட்டிற்கு வெளிப்புறம் ஒரு மரத்திற்கும் மற்றும் செங்கலால் ஆன ஒரு தூணிற்கும்  இடையே  நீண்ட ஊஞ்சல் ஒன்றை கட்டி அதில் படுத்து உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். 

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த தூண் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அந்த தூணில் இருந்த செங்கற்கள் அனைத்தும் சிறுமிகள் இருவரின் மீதும் விழுந்து அவர்களை மூடியது. இந்நிலையில்  பதறியடித்துக்கொண்டு அவரது பெற்றோர்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார்கள் செங்கற்களை அகற்றி, சிறுமிகளை மீட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கடுமையான காயங்களுடன் சிறுமிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement