செய்யாத குற்றத்திற்கு 31 வருடங்கள் சிறை தன்னடனை.! நிரூபணமான உண்மை.! ரூ.550 கோடி இழப்பீடு.!Sentenced to 31 years in prison for a crime not committed

அமெரிக்காவில் 1983-ல் 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்த வழக்கில் மெக்கோலம் மற்றும் லியோன் ஆகிய இருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து தங்கள் மீது தவறு இல்லை என வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தநிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனையில் அவர்கள் இருவரும் நிரபராதி என உறுதியானது. 

இதனையடுத்து அவர்கள் இருவரும் 2014-ல் விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து செய்யாத குற்றத்திற்காக தண்டனை பெற்று வாழ்க்கையை பறிகொடுத்ததாக நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். அவர்களது வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், நீதிபதிகள் இவர்கள் இருவருக்கும் 550 கோடி ரூபாயை இழப்பு தொகையாக அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில், மெக்கோலம் மற்றும் லியோன் இவர்கள் இருவரும் எங்களை போன்றே செய்யாத குற்றத்திற்காக பலர் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். அவர்களும் எங்களை போலவே விடுதலை பெற வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.