வேகமாக சுழல்கிறதா பூமி?!,.. 50 ஆண்டுகளுக்கு பின்பு நடந்த அபூர்வ நிகழ்வு?!: விஞ்ஞானிகள் அதிர்ச்சி..!

வேகமாக சுழல்கிறதா பூமி?!,.. 50 ஆண்டுகளுக்கு பின்பு நடந்த அபூர்வ நிகழ்வு?!: விஞ்ஞானிகள் அதிர்ச்சி..!



scientists-have-reported-that-the-earth-completes-its-r

கடந்த மாதம் 29 ஆம் தேதியன்று (ஜூலை மாதம்) பூமி 24 மணி நேரத்திற்கு முன்னதாக தன்னைத் தானே சுற்றும் சுழற்சியை முடித்ததாக விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர்.  சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் மற்றும் துணைக் கோள்கள் அடங்கிய அமைப்பு பால் வெளி அண்டம் என்று அழைக்கப்படுகிறது.

இதில் பூமி உள்ளிட்ட கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு வருடமாக கணக்கிடப்படுகிறது. பூமி ஒரு முறை சூரியனை சுற்றி வர 365 ¼ நாட்கள் எடுத்துக் கொள்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. நாள் என்பது பூமி தன்னை தானே சுற்றிக் கொள்ளும் காலம் ஆகும். பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இதுவே பூமியில் இரவு, பகல் தோன்ற காரணமாக உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூலை 29 ஆம் தேதியன்று, பூமி தனது வழக்கத்திற்கு மாறாக 1.59 மில்லி விநாடிகள் முன்னதாகவே தன்னைத் தானே சுற்றுவதை நிறைவு செய்ததாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இதன் காரணமாக மிகக் குறுகிய பகல் பொழுது, அதாவது பகல் பொழுதில் 2 வினாடிகள் மட்டும் குறைந்துள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன்பு பூமி தனது சுழற்சியை முன்னதாக முடித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1960 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதியன்று 1.47 மில்லி விநாடிகள் முன்னதாக தனது சுழற்சியை பூமி நிறைவு செய்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் கடந்த 50 ஆண்டுகளாகவே பூமி வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியின் சுழற்சியில் வேகம் மாறியதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.