வகுப்பறையில் தூங்கிய சிறுவனை எழுப்பிய ஆசிரியரை,திகைத்து போய் நிற்கவைத்த சிறுவனின் அட்டகாசம்.!

வகுப்பறையில் தூங்கிய சிறுவனை எழுப்பிய ஆசிரியரை,திகைத்து போய் நிற்கவைத்த சிறுவனின் அட்டகாசம்.!


school boy carry chair instead of bag in sleeping mood

சிறுவன் ஒருவன் தூக்க கலக்கத்தில் ஸ்கூல் பேகிற்கு பதிலாக நாற்காலியை கைகளில் கோர்த்து  சுமந்து சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிலிப்பைன்ஸில் உள்ள பள்ளி ஒன்றில் பள்ளி நேரம் நிறைவடைந்ததும் அனைத்து சிறுவர்களும் தங்கள் வகுப்பறையில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது 4 வயது சிறுவன் ஒருவன் வகுப்பறையில் தூங்கிக் கொண்டிருந்தான்.

உடனே ஆசிரியர் அவனது புத்தகங்களை பேக்கில் வைத்துவிட்டு அந்த சிறுவனை எழுப்பி வீட்டிற்கு செல்லுமாறு கூறினர். தூக்கத்திலிருந்து விரைந்து எழுந்த சிறுவன் தூக்கக்கலக்கத்தில் என்ன செய்கிறான் என தெரியாமல் தனது ஸ்கூல் பேக்கை எடுப்பதற்கு பதிலாக அருகில் உள்ள நாற்காலியை தோள்களில் மாட்டிக்கொண்டு நடந்துசெல்கிறான். 

இதனை கண்ட ஆசிரியர் திகைத்து போய் நின்றுள்ளார்  சிறுவனின் இந்த செயல் வீடியோவாக வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.