அய்யோ...இப்படி அழுகுறாரே! என்ன கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்க! சவுதி பாலைவனத்தில் கதறி அழுது வீடியோ வெளியிட்ட இந்தியர்! தேடுதல் பணியில் இந்திய தூதரகம் தீவிரம்.,....



saudi-indian-man-crying-video-updates

வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காக செல்பவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், சமீபத்தில் சவூதியில் சிக்கியதாக கூறிய இந்தியர் விடுத்த உதவி கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

இஸ்லாமியர்களின் புனித தலமான சவூதி அரேபியாவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. ஒட்டகங்கள் நிறைந்த பாலைவன பின்புலத்தில் போஜ்புரி மொழியில் பேசிய அவர், “நான் அலகாபாத் கிராமத்தைச் சேர்ந்தவன். சவூதிக்கு வந்தேன். கபில்தான் என் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துள்ளார். ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என கூறினால் கொன்றுவிட மிரட்டுகிறார். தயவு செய்து காப்பாற்றுங்கள்” என்று கதறியபடி பிரதமரிடம் உதவி கோரினார்.

இந்திய தூதரகம் அவசர நடவடிக்கை

இந்த வீடியோவை வழக்கறிஞர் கல்பனா ஸ்ரீவஸ்தவா எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததன் பின்னர், சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக பதிவுக்கு பதிலளித்துள்ளது. "அந்த நபரின் இருப்பிடத்தை அறிய முயற்சி நடந்து வருகிறது. ஆனால் வீடியோவில் அவர் இருக்கும் இடம், மாகாணம், தொடர்பு எண் அல்லது முதலாளி பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை என்பதால் உடனடி நடவடிக்கைக்கான விவரம் போதவில்லை" என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்த ஐடியா செம போங்க... பம்பே இல்லாமல் பைக் டயருக்கு காற்றடித்த நபர்! எப்படின்னு நீங்களே பாருங்க! வைரல் வீடியோ...

கூடுதல் தகவல் கோரி தூதரகத்தின் வேண்டுகோள்

மேலும் கல்பனா ஸ்ரீவஸ்தவாவை நேரடியாக டேக் செய்து, வீடியோவின் மூலத்திலிருந்து கூடுதல் தகவலை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அந்த நபர் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளதால், அப்பகுதி அதிகாரிகளிடமும் தொடர்பு தொடுக்கப்பட்டது. அவரது குடும்பத்தினரும் அல்லது நம்பகமான தகவல் வைத்திருப்போரும் உடனடியாக [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களுக்கு தாய்நாடு விரைவான உதவி அளிக்க முனைந்திருப்பது சமூக வலைதளங்களிலும் பாராட்டைப் பெற்றுள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: அட... சீனாவில் டிரைவரே இல்லாமல் சாலையில் இயங்கும் பேருந்து! ஆச்சரியம் கலந்த அதிசய வீடியோ...