உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பு - வீழ்ச்சியடைந்த இந்திய பங்குசந்தை.!

உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பு - வீழ்ச்சியடைந்த இந்திய பங்குசந்தை.!


Russia Ukraine War Indian Sensex and Nifty Flips Down

உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்துள்ள ரஷியா, அதனை தன்னுடன் இணைக்க உச்சகட்ட போரில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி துறைமுகம் மற்றும் மின் உற்பத்தி ஆலை குண்டுவீசி தாக்கப்பட்டுளளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

russia

இதனைப்போல, ரஷியாவின் படையெடுப்பால் ஏற்பட்டுள்ள பதற்றம் கச்சா எண்ணெயின் விலையை பேரலுக்கு 100 டாலர் என்ற அளவை தாண்டி இருக்கிறது. இந்நிலையில், உலகளவில் பல்வேறு பிரச்சனைகள் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை மதிப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனைப்போல உலகளவில் பணமதிப்பும் லேசான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது. 

இன்று காலை மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,428.34 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 55,803.72 என்ற அளவில் இருக்கிறது. இதனைப்போல, நிஃப்டி 413.35 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 16,647.00 என்ற புள்ளியில் இருக்கிறது.