மக்கள் வெளியே வருவதை தடுக்க, 800 சிங்கம், புலிகளை சாலையில் விட்டதா ரஷ்யா.? வைரல் புகைப்படத்தின் உண்மை பின்னணி.!

மக்கள் வெளியே வருவதை தடுக்க, 800 சிங்கம், புலிகளை சாலையில் விட்டதா ரஷ்யா.? வைரல் புகைப்படத்தின் உண்மை பின்னணி.!


Russia released 800 lions and tigers across Russia

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருவதை தடுக்க அணைத்து நாட்டு அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அணைத்து நாடுகளிலும் முக்கியமாக கடைபிடிக்கப்படும் வழிமுறைகளில் ஓன்று மக்கள் வீட்டிலையே இருப்பது.

இந்திய முழுவதும் ஒருநாள் ஊரடங்கு உத்தரவு நேற்று கடைபிடிக்கப்பட்டது. மேலும், இந்தியாவின் பல மாநிலங்களில் மக்கள் வெளியே வர தடைவிதித்து மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏதாவது ஒரு காரணத்திற்காக மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

corono

வைரஸ் உருவான இடமான சீனாவில், ட்ரோன்கள் மூலமும், ரோபோக்கள் மூலம் மக்கள் வெளியே வருவது கண்காணிக்கப்பட்டு கண்டிக்கப்பட்டனர். இந்நிலையில், ரஷ்யாவில், மக்கள் வீட்டை விட்டு வெளிய வராமல் இருக்க, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் நாடு முழுவதும் 800 சிங்கம் மற்றும் புலி போன்ற விலங்குகளைச் சாலைகளில் அவிழ்த்து விட்டுள்ளதாக புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

காட்டு விலங்குகள் வெளியே நடமாடுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள் என்ற காரணத்திற்காக இவ்வாறு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த தகவலை பலர் பார்த்தும், பலருடன் பகிர்ந்தும் வந்தனர்.

இந்நிலையில், இந்த தகவல் உண்மையா? போலியா என்பது குறித்து இந்தியா டுடே செய்தி நிறுவனம் கண்டறிந்துள்ளது. அதன்படி, இந்த புகைப்படம் ரஷ்யாவில் எடுக்கப்பட்டது இல்லை, 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தென்னாப்ரிக்காவின் ஜோஹனஸ்பர்க் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், கொலம்பஸ் என்ற பெயர் கொண்ட அந்த சிங்கம், சினிமா படப்பிடிப்பிற்காக சாலைக்கு அழைத்துவரப்பட்டது எனவும் கூறியுள்ளது.