#BigNews: உக்ரைனை அனைத்து திசையில் இருந்தும் கைப்பற்ற ரஷிய இராணுவம் உத்தரவு..!



Russia Army Order Attack All Sides of Ukraine

உக்ரைனை சோவியத் ரஷியாவுடன் இணைக்க ரஷியா மேற்கொண்டுள்ள நடவடிக்கை உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. கடந்த 3 நாட்களாக ரஷிய படைகள் உக்ரைனில் பல்முனை தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. தற்போது வரை உக்ரைன் தரப்பில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை என்றாலும், 2000 ரஷிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் மக்கள் பலரும் போலந்து நாடுகளின் எல்லை வழியே அகதியாக தஞ்சம் புகுந்துள்ள நிலையில், உலக நாடுகளின் எதிர்ப்புகள் மற்றும் பல்வேறு தடைகளையும் மீறி ரஷியா தனது தாக்குதலை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. உலக வல்லரசு மற்றும் மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிடம் உக்ரைன் அதிபர் உதவி கேட்டும் பலனில்லை. இதனால் தனி நாடாக ரஷியாவை எதிர்த்து உக்ரைன் இராணுவம் போர்புரிந்து வருகிறது. 

russia

உக்ரைனுக்கு அருகே இருக்கும் ஐரோப்பிய நாடுகளின் எல்லையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய US & NATO படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் உக்ரைனுக்கு நேரடியாக உதவி செய்ய இயலாத சூழல் உள்ளது. அங்குள்ள போலந்து உட்பட சில நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டு இராணுவ தளவாடங்கள் போன்றவற்றை வழங்கி வருகிறது. உக்ரைன் விவகாரத்தில் எந்த நாடு தலையிட்டால் வரலாறு காணாத பேரழிவை தருவோம் என ரஷியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளதால், உலக நாடுகள் 3 ஆம் உலகப்போரினை தவிர்க்க அமைதியாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில், இன்று அமைதி பேச்சுவார்த்தைக்கான சூழல் ஏற்பட்ட நிலையில், அது நடைபெறும் என்று எதிர்பார்த்த வேலையில் பலனில்லாமல் போனது. ரஷிய துருப்புகள் பேச்சுவார்த்தையின் போது தங்களின் தாக்குதலை குறைத்துக்கொண்டு நிலையில், பேச்சுவார்த்தை நடைபெறாத காரணத்தால் முழு வீரியத்துடன் கைப்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் அனைத்து திசைகளில் இருந்தும் ரஷிய துருப்புகள் முன்னேற உத்தரவிடப்பட்டுள்ளது.