உலகம்

மருத்துவர் செய்த தவற்றால் நிறைமாத கர்ப்பிணிக்கு நிகழ்ந்த சோகம்! சோகத்தில் குடும்பத்தினர்.

Summary:

Raishya alisa

ரஷ்யா சேர்ந்த அலிசா டெபிகினா என்ற 22 வயது நிரம்பிய நிறை மாத கர்ப்பிணி பிரசவ வலியால் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அலிசா என்ற பெண்ணுக்கு அன்யா என்ற அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த தனது குழந்தையை சிரித்த முகத்துடன் பார்த்துள்ளார். அதன்பிறகு அவருக்கு மருத்துவம் செய்த எலெனா பரன்னிகோவா என்பவர் இந்த பெண்ணின் நஞ்சுகொடியை வெளியே இழுப்பதற்கு பதில் கர்ப்பபையை வெளியே இழுத்துள்ளார்.

இதனால் வலி தாங்க முடியாமல் அலிசா கத்தியுள்ளார். கத்திய சிறிது நேரத்திற்குள் அலிசாவுக்கு நெஞ்சு வலி ஏற்ப்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் கத்தியது மருத்துவமனையில் உள்ள அனைவரும் தெரிந்துள்ளது.

உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் எலெனா என்ற மருத்துவரை கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவருக்கு தண்டனையாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 


Advertisement