சின்ன பையனை பாருங்க! விளையாட வேண்டிய வயசுல பணத்திற்காக என்ன செய்றான்னு! கண்கலங்க வைக்கும் வீடியோ...

புனே லட்சுமி சாலை பகுதியில் ஒரு சிறுவன் நிகழ்த்திய தனித்துவமான விளையாட்டு காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ, @godavari_tai_munde எனும் இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டு மக்கள் கவனத்தை பெற்றுள்ளது.
வீடியோவில், சிறுவன் தனது தலையில் ஒரு உலோக துண்டை கட்டியுள்ளான். இது நெற்றியில் ஒரு கயிற்றின் மூலம் நிலைத்திருக்க, அவன் தலையை ஆட்டும்போது அந்த உலோகம் சுழன்று கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த சிறுவன் மிகுந்த உழைப்பை மேற்கொள்கிறான். அவனது உடல் இயக்கங்கள் மற்றும் மன உறுதி, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுமக்களின் ஆதரவு
இந்த காட்சியைக் கண்ட பொதுமக்கள், சிறுவனின் முயற்சிக்கு ஆறுதலாக பண உதவிகளை வழங்குகிறார்கள். சிறுவனின் நெற்றியில் உள்ள திலகமும், அவன் செயலில் காணப்படும் தன்னம்பிக்கையும் மனதை தொடுகிறது.
இதையும் படிங்க: பிறப்புறுப்பில் பாட்டிலை சொருகிய இளம்பெண்! பெண் கூறிய காரணத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்! பெண்ணின் நிலைமை என்ன?
சிறுவன் விளையாட வேண்டிய வயதில், வாழ்க்கையை நடத்த இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் கவலையாக உள்ளது. இந்த வீடியோ பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. “வறுமை குழந்தைப் பருவத்தை பறிக்கிறது” என சிலர் வேதனை கூற, மற்றவர்கள் “சிறுவனின் தோள்களில் குடும்பப் பொறுப்பேற்பாடு நெஞ்சை பிளக்கிறது” என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மீனவரை கடலுக்குள் இழுத்துச் சென்ற 100 கிலோ மீன்! வலையில் சிக்கிய பிறகு ஆவேசத்துடன் மீன் செய்த அதிர்ச்சி சம்பவம்!