மேலாடையின்றி அரை நிர்வாணமாக போராடிய பெண்கள்; நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.!

மேலாடையின்றி அரை நிர்வாணமாக போராடிய பெண்கள்; நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.!



pranse - parise - without dress - strick - court - panished

போராட்டம் என்பது மனித வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. மக்கள் தங்களை சார்ந்துள்ள அரசு அமைப்புக்கு எதிராகவோ அல்லது பணிபுரியும் தளங்களில் தனியார் அமைப்புக்கு எதிராக போராடுகின்றன. இவ்வாறு போராடும் போராட்டங்களின் வகைகள் போராடுவோரின் தேவைக்கேற்ப மாறுபடுகிறது.

இவ்வாறு இன்றைய சூழலில் போராடி தான் ஒன்றினை பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அது பல சமயங்களில் சாதகமாகவும் அதுவே சிலசமயங்களில் பாதகமாகவும் மாறிவிடுகிறது. நமது நாட்டுப் போராட்டங்கள் மக்களை கவரும் வகையில் நூதனமாக அமையும். அதுவே வெளிநாடுகளில் சில சமயங்களில் தங்களது உணர்வுகளை வித்தியாசமாக வெளிக்காட்டுகின்றன. அவ்வாறான ஒரு நிகழ்வு பிரான்ஸ் நாட்டில் அரங்கேறியுள்ளது.

international

கடந்தாண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஃபிமென் என்ற அமைப்பை சார்ந்த இரண்டு பெண்கள் மேலாடையின்றி அரை நிர்வாணமாக ஆர்பாட்டம் ஒன்றை நடத்தினர்.மேலும் அவர்கள் தங்கள் உடலில் "ஃபிரி ரேப்" என எழுதியிருந்தனர்.

இந்த விவகாரம் அப்பொழுது பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து அந்த இரு பெண்கள் மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிற்கான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்படி நடந்து கொண்டதால் இரு பெண்களுக்கும் தலா 1000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 78ஆயிரம்) அபராதம் விதித்து  நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.