லாக்டவுனால் சில மாதங்கள் மூடிக்கிடந்த வீடு..! சில மாதங்கள் கழித்து மீண்டும் வீட்டை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி.! வைரல் புகைப்படங்கள்.!

லாக்டவுனால் சில மாதங்கள் மூடிக்கிடந்த வீடு..! சில மாதங்கள் கழித்து மீண்டும் வீட்டை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி.! வைரல் புகைப்படங்கள்.!


Potato starts to growing in kitchen due to lock down lock

பிரான்ஸ் நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக இளம் பெண் ஒருவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தனது ஆண் நண்பருடன் வசித்துவந்த நிலையில், ஊரடங்கு முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவருக்கு காத்திருந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டை சேர்ந்த டோனா போரே என்ற இளம் பெண் தனது வீட்டை பூட்டிவிட்டு தனது ஆண் நண்பர் வசிக்கும் வீட்டிற்கு சென்று அவருடன் வசித்துவந்துள்ளார்.

பிரான்சில் தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்தததை அடுத்து சில ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் டோனா போரே மீண்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த அவர் சமையல் அறைக்கு சென்றபோது அங்கிருந்த காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் அந்த இடத்தில் வினோதமாக இளம்சிவப்பு நிறத்தில் குட்சிகள் போன்றவை படர்ந்து இருந்தது.

அது என்னவென்று புரியாமல் பயத்துடன் அதன் அருகில் சென்று பார்த்த பின்பு தான் தெரிந்தது அது உருளை கிழங்கின் தளிர்கள் என்று. ஆம், லாக்டவுன் முன்னர் டோனா சமைப்பதற்காக உருளை கிழங்கு வாங்கி அதனை சமையல் அறைக்குள் வைத்துள்ளார். சில மாதங்களாக அந்த கிழங்கு வெளியே இருந்ததால் அது தளிர்விட்டு அறை முழுவதும் பரவி உள்ளது.

இதனை புகைப்படமாக எடுத்து டோனா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட, அந்த காட்சி தற்போது வைரலாகிவருகிறது.