வாவ்...யாருக்கு சார் வரும் இந்த மனசு...பனிக்கட்டி உறைந்த குளத்தில் இறங்கி போலீசார் செய்த நெகிழ்ச்சி செயல்.!



police-members-helping-tentancy

ஸ்பெயினின் வடக்கு பகுதியில் கடும் குளிர் நிலவி வருவதை அடுத்து தண்ணீர் நிறைந்த பகுதியான குளத்தில் பனிக்கட்டி முற்றிலும் உறைந்து காணப்படுகிறது. அப்படியான பனிக்கட்டி நிறைந்த குளத்தில் நாய் ஒன்று மாட்டி கொண்ட நிலையில் போலீசார் நாய் குட்டியை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கான்ஃபிரான்ஸ் நகராட்சியில் உள்ள குளத்தில் பல மணி நேரமாக நாய் ஒன்று சிக்கி தவித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து போலீசார் இரண்டு பேர் நாய் சிக்கி தவித்த குளத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது பனிக்கட்டி முற்றிலும் உறைந்த குளத்தில் சற்றும் யோசிக்காமல் இறங்கிய இரண்டு போலீசார் நாயை பத்திரமாக மீட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.