வாகனம் மீது விமானம் மோதி தீ விபத்து... பீதியில் அலறி துடித்த பயணிகள்...

வாகனம் மீது விமானம் மோதி தீ விபத்து... பீதியில் அலறி துடித்த பயணிகள்...


Plane accident in South Africa

ஓடுபாதையில் இருந்து மேலே பறக்க முயன்ற விமானம் திடீரென அங்கே நின்ற தீயணைப்பு வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்கா நாடானா பெரு தலைநகர் லிமாவில் இருந்து உள்ளூர் விமானமான ஏர்பஸ் ஏ 320 விமானம் ஒன்று 102 பயணிகளுடன் ஓடு பாதையில் இருந்து மேலே பறக்க முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கே நின்ற தீயணைப்பு வாகனத்தில் மோதியுள்ளது.

South Africa

வாகனத்தின் மீது விமானம் மோதியதில் விமானத்தின் பின்புறம் தீப்பிடித்துள்ளது. அதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அலறி கத்தியுள்ளனர். பின்னர் நீண்ட நேர முயற்சிக்கும் பின் விமானி விமானத்தை நிறுத்தியுள்ளார்.

உடனே அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து உள்ளே இருந்த 102 பயணிகள் மற்றும் பணியாளர்களை மீட்டுள்ளனர். ஆனால் தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.