"நடுவானில் கொர்".. விமானத்தில் 1/2 மணி நேரம் தூங்கிய 'கேப்டன்'.! இந்தோனேஷியாவில் கதி கலங்க வைக்கும் சம்பவம்.!

"நடுவானில் கொர்".. விமானத்தில் 1/2 மணி நேரம் தூங்கிய 'கேப்டன்'.! இந்தோனேஷியாவில் கதி கலங்க வைக்கும் சம்பவம்.!



pilot-and-co-pilot-sleeps-for-30-minutes-while-flying

விமானம் ஓட்டுவது மிகவும் சவாலான செயல். 150 பயணிகளுக்கு மேல் பிரயாணம் செய்த விமானத்தில், விமானியும், துணை விமானியும் அரை மணி நேரத்திற்கு மேலாக தூங்கியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்தோனேசிய விமான நிறுவனமான பாடிக் ஏர் BTK6723 எனப்படும் விமானத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தென் கிழக்கு சுலவேசியில் இருந்து ஜகார்த்தாவிற்கு பயணம் செய்ய சுமார் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் தேவைப்படுகிறது. இந்த பிரயாணத்தின் போது தான் விமானிகள் இருவரும் தூங்கியது தெரியவந்துள்ளது.

indonesia

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கேப்டன், துணை விமானியிடம் சிறிது ஓய்வெடுக்க அனுமதி கோரியுள்ளார். துணை விமானி தனது வீட்டில் இருந்த ஒரு மாத இரட்டைக் குழந்தைகளை பார்த்துக்கொள்ள மனைவிக்கு உதவுவதற்காக இரவு முழுவதும் கண்விழித்துள்ளார். அந்த சோர்வில் அவரும் தூங்கியுள்ளார்.

ஜகார்த்தாவில் உள்ள பகுதி கட்டுப்பாட்டு மையம் அந்த விமானத்தை தொடர்பு கொண்ட முயன்ற போது, விமானிகளிமிருந்து பதில் கிடைக்கவில்லை. சுமார் 28 நிமிடங்களுக்குப் பிறகு விமானி எழுந்துள்ளார். 

indonesia

அதன் பின் விமானம் சரியான பாதையில் செல்லவில்லை என்பதை உணர்ந்த அவர், தனது துணை விமானியை எழுப்பி ஜகார்த்தாவிலிருந்து வந்த அழைப்புகளுக்கு பதிலளிக்க கூறியுள்ளார். பின்னர் விமான பாதையை சரி செய்துள்ளார். இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த 153 பயணிகள் மற்றும் நான்கு விமான பணிப்பெண்கள் ஆகியோர் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.

இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம் அந்த விமானிகளிடம் தீவிர விசாரணையை நடத்தி வருகிறது. மற்றும் அந்த விமான நிறுவனத்தின் தரம் மற்றும் விமானிகள் மற்றும் விமானக் குழுவினர்களின் ஓய்வு குறித்தும் கடந்த மார்ச் 9ஆம் தேதி விசாரணையை நடத்தியுள்ளது. அந்த விமான நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்கவும் இந்த சம்பவம் வழி வகுத்துள்ளது.