உலகம் வீடியோ

அட.. இப்படியும் நடக்குமா? ரோட்டில் நடந்து சென்றபோது திடீரென தீப்பற்றி எரிந்த பை!! வெளியான பதறவைக்கும் உண்மை!!

Summary:

சீனாவில் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் நபர் ஒருவர

சீனாவில் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் நபர் ஒருவர் தீக்காயங்கள் அடைந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சீனாவில் நபர் ஒருவர் தனது தோழியுடன் பேசிக் கொண்டே நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவர் தோளில் மாட்டியிருந்த பை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த நிலையில் சூட்டைத் தாங்க முடியாமல் அந்த நபர் பையை தூக்கி வீசியுள்ளார்.

 ஆனால் அதற்குள் அந்த தீ பரவியதில் அவரது கை, இடுப்பு மற்றும் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் முடிகளும் நெருப்பில் பொசுங்கியுள்ளது. இதுகுறித்து அந்த நபர், தனது பையிலிருந்து வெடித்தது சாம்சங் மொபைல் போன். அது 2016 ஆம் ஆண்டு வாங்கியது எனக் கூறியுள்ளார்.  மேலும் வெடிக்கும்போது அந்த போனில் சார்ஜ் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Advertisement