ஐயோ... கடவுளே! பள்ளி வகுப்பறையில் கத்தி குத்து... 5-ம் வகுப்பு பிஞ்சு குழந்தைகளை அடுத்தடுத்து கத்தியால் குத்திய 8 ஆம் வகுப்பு மாணவி! உலகையே உலுக்கிய வீடியோ...!!!



philippines-school-stabbing-general-trias-bethel-academ

பிலிப்பைன்ஸ் நாட்டின் காவிதே மாகாணம், ஜெனரல் ட்ரியாஸ் நகரில் உள்ள பெத்தேல் அகாடமி தனியார் பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8-ஆம் வகுப்பில் படிக்கும் 14 வயது மாணவி, 5-ஆம் வகுப்பு மாணவர்கள் இருந்த வகுப்பறைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 7 சிறுவர்கள் காயமடைந்தனர். இதில் இரு மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வகுப்பறைக்குள் திடீர் தாக்குதல்

தகவலின்படி, 10 மற்றும் 11 வயதுடைய மாணவர்கள் வகுப்பில் இருந்தபோது, 14 வயது மாணவி திடீரென கத்தியுடன் உள்ளே நுழைந்து சரமாரியாக தாக்கியுள்ளார். காயமடைந்த 7 மாணவர்களும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தண்டனை என்ற பெயரில் குழந்தைக்கு கொடுத்த சித்திரவதை.... ஒரு ஆசிரியரின் பிடிவாதத்தால் பரிதாபமாக போன மழலையின் உயிர்! கதறும் பெற்றோர்கள்..!!!

ஆசிரியர்கள் கூட்டத்தில் இருந்த நேரம்

இந்த தாக்குதல் நடந்தபோது பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வகுப்பறையில் மாணவர்களை கண்காணிக்க ஆசிரியர்கள் யாரும் இல்லாத சூழல் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

காரணம் குறித்து போலீசார் விசாரணை

தாக்குதல் நடத்திய மாணவி சமீபத்தில்தான் அந்தப் பள்ளியில் சேர்ந்தவர் என்றும், காயமடைந்த மாணவர்களுடன் அவருக்கு தனிப்பட்ட தொடர்பு இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மாணவர்களுக்கிடையேயான கேலி, மிரட்டல் அல்லது குழு மோதல் போன்ற பின்னணி இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மாணவியின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகள் மேலும் பலப்படுத்தப்படும் என காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: தகாத வார்த்தைகளை தாங்க முடியாமல் எதிர்த்து பேசிய பெண்! நிமிடத்தில் அரங்கேறிய அட்டூழியம்..... அதிர்ச்சி சிசிடிவி வீடியோ!!!