உலகம்

பெட்ரோல்,டீசல் இலவசம்! புதிய சலுகையால் அலைமோதும் கூட்டம்! ஆனால் ஒரு கவர்ச்சியான கண்டிஷன்! என்ன தெரியுமா?

Summary:

petrol free who wearing bigini dress

உலகம் முழுவதும் புதிதாக துவங்கப்படும் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தங்களது தொழில் நன்கு வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவும்,  நிறுவனங்களின் பெயர் மக்களிடையே விரைவில் போய் சேரவேண்டும் என்பதற்காகவும் பல வித்தியாசமான அறிவிப்புகளை வெளியிடுவர். மேலும் அதற்காக பொருட்களை இலவசமாக கொடுக்கவும்  முன்வருவர்.

 இந்நிலையில் ரஷ்யாவில் துவங்கப்பட்ட பெட்ரோல் பங்க் மக்களிடையே விரைவில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக மிகவும் வித்தியாசமான ஆஃபர் ஒன்றை அளித்து ஊழியர்களையே திணற செய்துள்ளது.

பிகினி உடையில் பெட்ரோல் க்கான பட முடிவு

 ரஷ்யாவில் சைரா என்ற பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திறப்பு விழாவை முன்னிட்டு  தங்களது பெட்ரோல் பங்கில் முதல் மூன்று மணி நேரம் பெட்ரோல், டீசல் வாங்க வரும் நபர்கள் பிகினி உடையில் வந்தால் அவர்களுக்கு இலவசமாக பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என வித்தியாசமான சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அந்த பகுதியில் பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைவரும் பிகினி உடையில் பெட்ரோல் வாங்க குவிந்துள்ளனர்.

 இந்நிலையில் கூட்டம் அதிகரித்த நிலையில் பங்க்  ஊழியர்கள் செய்வதறியாது திணறிப் போயுள்ளனர். மேலும் மூன்று மணி நேரம் மட்டும் வழங்கப்பட்ட இந்த சலுகையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெட்ரோல, டீசல் வாங்கிச் சென்றுள்ளனர்.இந்நிலையில் இலவச பெட்ரோல் வாங்குவதற்காக ஆண்களும், பெண்களும் பிகினி உடையில் கூடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் புதிதாக துவங்கப்பட்ட அந்த பெட்ரோல் பங்க் மக்கள் மத்தியிலே சில மணி நேரங்களிலேயே பெருமளவில் பிரபலமானது.


Advertisement