வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
இப்படி செய்ய அம்மா அப்பாவுக்கு எப்படி மனசு வந்துச்சு! விமான நிலையத்தில் 10 வயது மகனை தனியாக விட்டுவிட்டு பயணித்த பெற்றோர்! காரணம் என்ன தெரியுமா? பகீர் சம்பவம்....
தாய் தந்தையின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் ஒருவரின் வாழ்க்கையையே ஆபத்தில் இழுக்கக்கூடியதாக இருக்கலாம். இது போலவே, ஸ்பெயினில் நடந்த ஒரு சம்பவம், பெற்றோரின் செயல்கள் மீது உலகம் முழுவதும் கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.
பாஸ்போர்ட் பிரச்சனை காரணமாக விமானத்தில் அனுமதி மறுப்பு
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் உள்ள ‘எல் பிராட்’ சர்வதேச விமான நிலையத்தில், 10 வயது மகனின் பாஸ்போர்ட் காலாவதியானதால் விமானம் ஏற அனுமதிக்கப்படவில்லை. விசாவும் இல்லாததால் சிறுவன் விமானத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தனியாக விட்டுச் சென்ற பெற்றோர் மீது விமர்சனம்
தங்களது விமான டிக்கெட் வீணாகிவிடும் என்ற பயத்தில், சிறுவனை விமான நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு, பெற்றோர் தங்கள் தாயகத்துக்கு விமானத்தில் ஏறிச் சென்ற சம்பவம் பலரது கோபத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விமான நிலைய ஊழியர் லிலியன், டிக்டாக் வீடியோவொன்றில் இந்த விவரத்தை பகிர்ந்ததும், அது வைரலாகி தற்போது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: விமான ஓடுதளத்தில் திடீரென புகுந்த கரடி... வைரல் வீடியோ...
சிறுவனை போலீசார் மீட்டனர்
விமான நிலையம் அருகிலுள்ள கார் பார்கிங்கில் தனியாக இருந்த சிறுவனை போலீசார் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டனர். இது குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அலுவலர் லிலியன் கூறும்போது, "இதுபோன்ற செயலை நான் இதுவரை பார்த்ததில்லை. பெற்றோர் இப்படிச் செய்வதற்கு எப்படி மனம் வந்தது?" எனக்கேட்டுள்ளார்.
விமான நிலைய அதிகாரிகளின் மீள்செயல்
விமானம் புறப்படுவதற்கு முன் பைலட்டுடன் தொடர்பு கொண்டு பெற்றோரின் பயண பைகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டன. போலீசார் அந்த தம்பதியரையும், அவர்களுடன் இருந்த மற்றொரு சிறுவனையும் பாதுகாப்பாக காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் பெற்றோர் பொறுப்பின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை முறையாக கவனிக்க வேண்டும் என்பது மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்படுகிறது.