ரூ.21 கோடி போதை பொருளுடன் வந்த பாகிஸ்தான் ட்ரோன்!!.. எல்லையில் பரபரப்பு..!!Pakistani drone carrying Rs 21 crore worth of drugs

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகேயுள்ள தனோய் கலான் என்ற கிராமத்தின் அருகே இந்திய-பாகிஸ்தான் எல்லை உள்ளது. இந்த சர்வதேச எல்லை அருகே பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ட்ரோன் ஒன்று எல்லையை கடந்து வந்துள்ளது.

ட்ரோனின் கீழ்பகுதியில் பிங்க் நிற பொட்டலம் ஒன்று இருப்பதை கண்ட பாதுகாப்பு படையினர், அதனை சுட்டு வீழ்த்த முயற்சி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த ட்ரோன் பாகிஸ்தான் எல்லைக்கு திரும்பிச் சென்றது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அங்கிருந்த வயல்வெளி பகுதியில் பிங்க் நிற பொட்டலம் ஒன்றை கண்டெடுத்தனர். அந்த பொட்டலம், ட்ரோனை சுட்ட போது அதில் இருந்து விழுந்தது என்றும், அதில் சுமார் 3 கிலோ அளவில் ஹெராயின் என்ற போதைப் பொருள் இருந்ததாகவும் அதன் மதிப்பு ரூ.21 கோடி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.