
இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க, பாக். உளவுத்துறை திட்டம்.. இந்தியாவிற்கு பரபரப்பு எச்சரிக்கை.!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி காவல் உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் ராக்கெட் உதவியுடன் கையெறிகுண்டு வீசப்பட்டது. காலிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ள நிலையில், அதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் களமிறங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவுத்துறை புதிய பயங்கரவாத அமைப்பை உருவாக்கி இருப்பதாகவும், அதற்கு லஷ்கர்-இ-கல்சா என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த இயக்கத்திற்காக ஆட்கள் தேர்வு நடந்து வருவதாகவும் சந்தேகிக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்கானிய பயங்கரவாதிகள் ஜம்முவில் பிரிவினைவாதிகளை ஒன்றிணைத்து சதித்திட்டம் செயல்படுத்தி வருவதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த செயல்திட்டத்தை முறியடிக்க தேவையான நடவடிக்கையையும் இந்தியா எடுத்து வருகிறது.
Advertisement
Advertisement