நாங்க அணுகுண்டு வச்சிருக்கோம்., தேவைப்பட்டால்... பாக். பெண் அமைச்சர் பரபரப்பு பேச்சு.. கொந்தளிப்பில் இந்தியர்கள்.!

நாங்க அணுகுண்டு வச்சிருக்கோம்., தேவைப்பட்டால்... பாக். பெண் அமைச்சர் பரபரப்பு பேச்சு.. கொந்தளிப்பில் இந்தியர்கள்.!



Pakistan Minister Shazia Marri Threaten India Atomic Bomb

 

உள்ளூர் அரசியலில் தங்களை தக்கவைக்க வாயைக்கொடுத்த பாகிஸ்தானின் சர்ச்சை செயலில் எண்ணெய் ஊற்றி எரிக்கும் வகையில் பெண் அமைச்சர் பேசியது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை காமிச்சார் பிலாவல் பூட்டோ அவதூறு கருத்தை தெரிவித்து இருந்தார். இந்த விசயத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவிக்க, பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக இந்தியாவில் பல இடங்களில் பாஜகவினர் தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது.

பல்வேறு இடங்களில் பாஜகவினர் பாகிஸ்தான் அமைச்சரை கொடும்பாவியாக பாவித்து உருவபொம்மை எரிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், பாகிஸ்தானின் பெண் அமைச்சர் இந்தியாவுக்கு அணுகுண்டு மிரட்டல் விடுத்தது இருக்கிறார். 

Pakistan

பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பெண் தலைவர், அமைச்சர் ஷாஜியா மாரி பேசுகையில், "பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது. அதனை இந்தியா மறந்துவிட கூடாது. எங்களின் அணுசக்தி நிலைகள் அமைதியாக இருக்கலாம். தேவைப்பட்டால் பின்வாங்கமாட்டோம்.

ஒருவருக்கான பதில் எப்படி கூறவேண்டும் என பாகிஸ்தானுக்கு தெரியும். எங்களை அறைந்தால் நாடு பின்வாங்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாங்களும் தீவிரத்தோடு பதிலடி வழங்குவோம். இந்தியா பிரதமர் வெறுப்பை பரப்பி வருகிறார். மோடி அரசு சண்டையிடும் பட்சத்தில் தக்க பதிலடி வழங்குவோம். 

Pakistan

எங்களின் மீது குற்றசாட்டுகள் கூறினால், அதனை நாங்கள் அமைதியுடன் கேட்டுக்கொண்டு இருக்கமாட்டோம்" என்று கூறினார். இவரின் கூற்றுகள் சர்ச்சையை ஏற்படுத்த தொடங்கியுள்ள நிலையில், தனது ட்விட்டரில், "பாகிஸ்தான் அணுசக்தி கொண்ட நாடு என்றாலும் பொறுப்புடன் இருக்கும். இந்திய ஊடகங்கள் பீதியை ஏற்படுத்துகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் அதிகளவு தியாகம் செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.