அடக்கடவுளே! இந்த வயசுலேயே இப்படியா... குழந்தை நடிகர் பிரபல உமர் ஷா திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி...



pakistan-child-actor-umar-shah-passes-away

பாகிஸ்தான் பொழுதுபோக்கு உலகம் திடீர் சோகத்தில் மூழ்கியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த குழந்தை நடிகர் உமர் ஷா திடீர் மரணம் அந்த நாட்டின் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக பிரபலமான உமர் ஷா

15 வயதான உமர் ஷா, ஜீதோ பாகிஸ்தான் உட்பட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தார். சிறுவயதிலேயே அவர் தனது இயல்பான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். பல குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவரது சிரிப்பு இன்னும் ரசிகர்களின் மனதில் நிறைந்திருக்கிறது.

திடீர் மரணம் சமூகத்தில் அதிர்ச்சி

உமர் ஷா திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது சகோதரர் அகமதுஷா தெரிவித்தார். குறிப்பிடத்தக்கது என்னவெனில், அகமதுஷா டிக் டாக் தளத்தில் பிரபலமானவர். சிறுவயதில் இருந்தே ரசிகர்களை கவர்ந்த உமர் ஷாவின் மறைவு சமூக வலைதளங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வில்லனும் நகைச்சுவை நடிகருமான மதன் பாப் இன்று சென்னையில் காலமானார்! தமிழ் திரையுலகில் ஆழ்ந்த சோகம்...

சிறு வயதிலேயே திறமை மற்றும் உற்சாகத்தால் அனைவரின் மனதையும் கவர்ந்த உமர் ஷாவின் திடீர் மறைவு பாகிஸ்தான் மக்களின் மனதில் நீங்காத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: வீடே வெறிச்சோடி இருக்கு பாருங்க! நடிகர் மதன் பாப் இறப்புக்கு எந்த நடிகரும் வரல! அசத்த போவது யாரு டீம் கூட வரல! இப்படி ஒரு நிலைமையா?