யுவன் சங்கர் ராஜாவினால் தான் என் குடும்பம் இந்த நிலைமைக்கு வந்தது... தனுஷின் உருக்கமான பேச்சு.!!
விஸ்வரூபத்தை கனெக்ட் செய்யும் பின் லேடன் மகனின் பேட்டி.. பரபரப்பு தகவல்கள் அம்பலம்.!
விஸ்வரூபத்தை கனெக்ட் செய்யும் பின் லேடன் மகனின் பேட்டி.. பரபரப்பு தகவல்கள் அம்பலம்.!

அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப். 11ம் தேதியில் அமெரிக்காவின் இராணுவ தலைமையகம் பெண்டகன், நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தில் பின்லேடனின் அல்-கொய்தா பயங்கரவாதிகள் விமானத்தில் மோதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் நடத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடன் 2011, 2 மே அன்று அமெரிக்கா படையினரால் கொல்லப்பட்டார். இவரின் முதல் மனைவி நஜ்வாவுக்கு பிறந்த நான்காவது மகன் உமர் பின்லேடன் (வயது 41). இவர் தனது மனைவி ஜேனுடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள நார்மண்டியில் வசித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் தி சன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் ஆப்கானிஸ்தானில் இறங்கும்போது, எனது குழந்தை பருவம் தேரா போராவில் கழிந்தது. எனது நாய்களின் மீது ரசாயன ஆயுதங்கள் பரிசோதனை நடத்தப்பட்டது. எனக்கு பயங்கரவாத முகாம்களில் ஏ.கே 47 ரக துப்பாக்கியால் சுட பயிற்சி வழங்கப்பட்டது.
நான் ஒரு பயங்கரவாதியாக வேண்டும் என தந்தை ஆசைப்பட்டார். எனக்கு அவர்களின் மீது ஆரம்பத்தில் இருந்து இனம்புரியாத கவலை இருந்தாலும், அவர்களிடம் இருந்து தள்ளியிருக்க விரும்பினேன். எனது வாழக்கையின் அந்த அனுபவங்களை மறக்க 2001ல் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினேன்.
2001க்கு பின்னர் நானும், அப்பாவும் பேசிக்கொண்டது இல்லை. அவர் கொல்லப்பட்டபோதும் நான் அழவில்லை. ஒரு மகனாக தந்தையின் உடலை பெற்றிருந்தேன் என்றால், அதனை அடக்கம் செய்திருப்பேன். அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் பயங்கரவாதி தனது பிள்ளைகளையும் அதே பாதையில் அழைத்து செல்ல முடிவெடுக்கும்போது, நாயகன் கமல் ஹாசன் அவர்களை காப்பாற்றி படிக்க வைத்திருப்பது போன்ற காட்சிகள் இருக்கும். அதுபோன்ற பின் லேடனின் மகன் உமர் பின்லேடனும் பதில் தெரிவித்துள்ளார்.