தனது மகள் மற்றும் மனைவி மீது அளவுகடந்த பாசம் வைத்த நபர்.! ஒரு நொடிப்பொழுது கோபத்தால் நிகழ்ந்த சோகம்.. - TamilSpark
TamilSpark Logo
உலகம்

தனது மகள் மற்றும் மனைவி மீது அளவுகடந்த பாசம் வைத்த நபர்.! ஒரு நொடிப்பொழுது கோபத்தால் நிகழ்ந்த சோகம்..

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின் மோனிப்பள்ளியை சேர்ந்தவர் மெரின் ஜாய் -பிலிப்மேத்யூ தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. மெரின் அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டதை அடுத்து பிரிந்து வாழ்ந்துள்ளார். அதில் குழந்தையை மெரின் வளர்ந்து வந்துள்ளார். பிலிப்மேத்யூ குழந்தையை பார்க்க மெரின் வீட்டிற்கு வரும் போதெல்லாம் மெரின் குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பிலிப்மேத்யூ மெரின் வேலையை முடித்து விட்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் போது கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். அதில் மெரின் உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து போலீசார் பிலிப்மேத்யூவை கைது செய்துள்ளனர். 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo