உலகம் லைப் ஸ்டைல்

திருடனை துடைப்பத்தால் அடித்து ஓடவிட்ட பாட்டி..! தலைதெறிக்க ஓடிய திருடன்..! வைரல் வீடியோ.!

Summary:

Old lady attack robber video goes viral

துப்பாக்கியுடன் கடைக்குள் புகுந்த முகமூடி கொள்ளையன் ஒருவன் வயதான பாட்டி ஒருவர் தரை துடைக்கும் துடைப்பம் கொண்டு அடித்து விரட்டிய காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

போலந்து நாட்டின் பிங்க்ஸ் என்கிற இடத்தில் வயதான மூதாட்டி ஒருவர் பல்பொருள் அங்காடி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத முகமூடி திருடன் ஒருவரின் கை துப்பாக்கியுடன் அந்த பாட்டியின் கடைக்குள் திருடுவதற்காக உள்ளே நுழைகிறான்.

திருடன் வருவதை பார்த்த பாட்டி தரை துடைக்கும் துடைப்பத்தை எடுத்து அந்த திருடனை தாக்க தொடங்குகிறார். பாட்டியின் அடியில் இருந்து விலகி பணத்தை திருட முயற்சிக்கிறான் அந்த திருடன். ஆனால், அவனை விடாமல் மீண்டும் மீண்டும் தாக்குகிறார் அந்த மூதாட்டி.

ஒருகட்டத்தில், பாட்டியின் அடியை தாங்க முடியாத திருடன் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்பதுபோல் தலைதெறிக்க ஓடுகிறான். இந்த சம்பவம் அங்கிருந்த CCTV கேமிராவில் பதிவாகி தற்போது வைரலாகிவருகிறது. துணிச்சலாக செயல்பட்ட பாட்டிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Advertisement