நம்மை அமெரிக்கா அச்சுறுத்தினால் அணு ஆயுதம் தான்., வடகொரியா பகீர் அறிவிப்பு.!North Korea Warning America about Nuclear Weapon

வடகொரியா - அமெரிக்கா இடையேயான உறவில் பதற்றம் நிலவி வருகிறது. இதில், வடகொரியா - தென்கொரியா பிரச்சனையில், தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கிறது. இது வடகொரியா - தென்கொரியா உறவுகளை கடுமையாக சேதப்படுத்திய நிலையில், வடகொரியா - அமெரிக்கா இடையேயான பனிப்போரை அதிகரித்தது. 

இந்த நிலையில், வடகொரியா - தென்கொரியா இடையே சுமூகமான நிலை உருவாகிவரும் நிலையில், தென்கொரியாவின் ஏற்பாட்டின் பேரில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிங்கப்பூரில் வைத்து வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை முதல் முதலில் நேரில் சந்தித்தார். உலகமே கவனித்த விஷயத்தில் கொரியாவை அணுஆயுதமில்லாத பிரேதசமாக மாற்ற உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. 

இதன்பின், இருநாட்டு உறவில் நல்ல முன்னேற்றம் கிடைத்த நிலையில், 2019 பிப்ரவரியில் வியட்நாம் அருகே நடந்த அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை பாதியில் முடிந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்விக்கு பின்னர் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது. தென்கொரியாவுடனும் வடகொரியா இணக்கமாக செல்லாத நிலையில், அவ்வப்போது போர்ப்பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்கா அதிபராக ஜோ பைடன், தென்கொரியா அதிபராக யூன் ஸுக் யோல் பொறுப்பேற்றாலும் உறவு நிலையில் முன்னேற்றம் இல்லை. வடகொரியாவை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும் பலனில்லை. நேற்று முன்தினத்தில் கொரியப்போரின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கிம் ஜாங் உன் தன்னாட்டு போர் வீரர்கள் முன்னிலையில் பேசும்போது ஆவேசமாக பேசியிருந்தார். அதில், எந்த ஒரு நெருக்கடிக்கும் தயாராக நமது படைகள் உள்ளன. அணு ஆயுத போரை தட்டுப்பது, அதற்கான கடமையாற்றுவது, அணி திரட்ட தயாராவது இருக்கிறது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடன் இராணுவ மோதல் வரும் பட்சத்தில் நாம் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம். அமெரிக்காவின் விரோதக்கொள்கையை நியாயப்படுத்த வடகொரியாவை பேய் போல சித்தரிக்கிறார்கள். அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டுபோர்பயிற்சி செய்கிறது. தென்கொரியாவின் தற்போதைய அதிபர் அமெரிக்காவுடன் மேலும் நெருங்கிய கூட்டாளியாகி நம்மை அச்சுறுத்துவார். அதனை எதிர்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.