அடக்கொடுமையே! ஒரு அப்பார்ட்மெண்ட் ரூ. 1.5 கோடி! ஆனால் பென்சிலுக்கு கூட தாங்காத சுவர்... வைரலாகும் சர்ச்சையான வீடியோ!



noida-apartment-wall-viral-video

இந்தியாவின் நகர வளர்ச்சியின் மத்தியில், நொய்டா அபார்ட்மெண்ட் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. உயர்ந்த விலையில் விற்பனை செய்யப்படும் குடியிருப்புகளின் தரம் குறித்து பொதுமக்களிடையே கேள்விகள் எழுந்துள்ளன.

பென்சிலால் சுவரில் ஓட்டை – அதிர்ச்சி வீடியோ!

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவர், தனது ₹1.5 கோடி மதிப்புள்ள அபார்ட்மெண்ட் சுவரில் பென்சிலால் எளிதாக ஓட்டை போட முடிந்ததை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இப்படி ஒரு வைத்தியமா? பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி! கொதிக்கும் எண்ணெய்யை கால்களால்.....வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

உயர்ந்த விலை, குறைந்த தரம்!

அந்த வீடியோவில் இளைஞர், தன் வீட்டின் விலை மிக அதிகமானதாய் இருந்தாலும் அதன் கட்டுமான தரம் மிக மோசமானது என்றும் குற்றஞ்சாட்டுகிறார். இது கட்டுமானத் தரம் குறித்து பலரிடமும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

நெட்டிசன்களின் கடும் விமர்சனம்

இந்த வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், இந்தியாவின் நகரங்களில் அதிக விலைக்குக் குறைந்த தரத்திலான வீடுகள் வழங்கப்படுகின்றன என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிலர், வீட்டு வசதி வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

நொய்டா சுவர் சம்பவம், நாட்டின் கட்டுமானத் துறையில் உள்ள குறைகள் வெளிச்சமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து புதிதாக சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.