#Video : கொசுகிட்டே இருந்து தப்பிக்க இப்டி ஒரு சீன டெக்னிக்கா.? இது நல்லா இருக்கே.!

கொசுவால் ஆபத்து
கொசுக்கடியினால் தூங்க முடியாமல் அவதிப்படுவது ஒருபுறம் இருந்தாலும், இதனால் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டு டெங்கு போன்ற காய்ச்சல்கள் ஏற்படுவதால் உயிருக்கே ஆபத்து உண்டாகும் நிலைமை இருக்கிறது.
புதிய டெக்னிக்
இப்படிப்பட்ட கொசுவிடம் இருந்து தப்பிக்க மனிதர்கள் பல்வேறு டெக்னிக்குகளை பயன்படுத்திக்கொண்டு இருந்தாலும், பெரிய அளவில் எதுவும் கை கொடுக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் சீனாவை சேர்ந்த ஒரு நபர் கண்டுபிடித்துள்ள டெக்னிக் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: வீட்டுப்பாடம் செய்யாத மகன்; கண்டித்ததால் தந்தை போதைப்பொருள் வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல்.!!
கொசு பிடிக்கும் ஃபேன்
அந்த வீடியோவில் ஒரு பெடஸ்டல் ஃபேன் முன்பு கொசு வலையை பொருத்தியுள்ளனர். அதே ஃபேனுக்கு பின்புறம் யூவி லைட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த லைட்டை நோக்கி கொசுக்கள் வரும். அப்போது, அது ஃபேன் மூலம் உள்ளிழுக்கப்பட்டு கொசுவலைக்குள் அவற்றை தள்ளி விடுகின்றன.
வைரலாகும் வீடியோ
இதனால், கொசுக்கள் உள்ளிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொள்கின்றன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் நிலையில், இதை பலரும் பாராட்டி கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாக்., கிரிக்கெட் அணி தோல்வியடைந்த ஆவேசம்.. டிவியை உடைந்து ஆதங்கப்பட்ட ரசிகர்கள்?