13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
மீறினால் கடும் தண்டனை! கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிரடி முடிவெடுத்த நாடு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றி கொரோனா வைரஸ் தற்போது அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 25000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய கொரோனா வைரஸால் பல நாடுகளும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் இந்த கொரோனா வைரஸ்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோயை கட்டுப்படுத்த சீன அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அதற்காக தற்காலிகமாக மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதல் ஹொங்ஹொங்கிலும் பரவி வருவதால், அதை கடுப்படுத்த அந்நாட்டு அரசு இன்று முதல் சில புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. சீனாவிலிருந்து ஹொங்ஹொங்கிற்கு வருபவர்கள் 14 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும். அவர்கள் தன்னைத்தானே விடுதிகளில் தனிமைப்படுத்தி கொள்ளலாம் அல்லது அரசாங்கம் நடத்தும் மையங்களில் சேர்ந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் பெருமளவில் இருக்கும்நிலையில் ஹொங்ஹொங் மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளே இருக்க வேண்டியது அவசியம் எனவும், மேலும் இந்த விதிமுறைகளை பின்பற்ற தவறினால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது மட்டுமின்றி கட்டாயமாக சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று அதிரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.