அதிர்ச்சி! விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை நொடிப்பொழுத்தில் தூக்கி கொண்டு சென்ற மர்ம பெண்! பரிதவிக்கும் பெற்றோர்... பல தனிப்படைகள் மூலம் தேடுதல் வேட்டை! சிக்கிய CCTV காட்சி...!!!



mumbai-two-year-old-boy-kidnapped-cctv

மும்பை மாங்கூர்டு பகுதியில் 2 வயது ஆண் குழந்தை மர்ம பெண்ணால் கடத்தப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிஎம்ஜிபி காலனியில் விளையாடிக் கொண்டிருந்த ஏகான்ஷ் அர்ஜுன் ரத்தோட் என்ற குழந்தையை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தூக்கிச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை மீட்க தீவிரமாக தேடி வருகின்றனர்.

குழந்தையை தூக்கிச் சென்ற மர்ம பெண்

குழந்தை காணாமல் போனதைத் தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஒரு பெண் தூக்கிக்கொண்டு வேகமாக அங்கிருந்து நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: சாதாரண பல் வலியில் தொடங்கிய அதிர்ச்சி! 9 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு நடந்த பெரும் சோகம்! 33 வயதில் முடிந்த வாழ்க்கை... விழிப்புணர்வை உண்டாக்கும் இளம்பெண்ணின் கதை!!!

பல தனிப்படைகள் அமைத்து தேடுதல்

தகவல் கிடைத்தவுடன் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். குழந்தையை பத்திரமாக மீட்பதற்காக பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த பெண் சென்றிருக்கக்கூடிய வழித்தடங்களை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.

பேருந்து, ரயில் நிலையங்களில் கண்காணிப்பு

குழந்தையை கடத்திச் சென்ற பெண் நகரை விட்டு வெளியேறியிருக்கிறாரா என்பதை கண்டறிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய போக்குவரத்து பாதைகளில் உள்ள கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. குழந்தை கடத்தல் தொடர்பாக கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் போலீசார் சரிபார்த்து வருகின்றனர். குழந்தையை விரைவாக மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: கொடூர சம்பவம்..! வெறும் 12 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து 5 சிறுமிகள்! 13 வயது சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்து சென்று சீரழித்த வாலிபர்...!!!