பாவம்.. கொரோனாவுக்கு சிறந்த மருந்து என நினைத்து 4 நாட்களாக தங்கள் சிறுநீரை குடித்துவந்த தாய் - மகன்.. வாட்ஸப் வீடியோவால் ஏற்பட்ட சோகம்..

சிறுநீரை குடித்தால் கொரோனா வராது என வந்த வாட்சப் தகவலை நம்பி தாயும், மகனின் சிறுநீரை குடித


Mother and son drank own urine for corona treatment

சிறுநீரை குடித்தால் கொரோனா வராது என வந்த வாட்சப் தகவலை நம்பி தாயும், மகனின் சிறுநீரை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தலைவிரித்தாடும்நிலையில், தற்போது பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. அதேநேரம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் அனைத்து நாடுகளும் தங்கள் மக்களுக்கு அறிவுறுத்திவருகிறது.

அதேநேரம் ஒருசில மூட நம்பிக்கைகள், தவறான தகவல் போன்ற காரணங்களால் கொரோனா மருந்து என்ற பெயரில் சில தவறான சம்பவங்களும் நடந்துவருகிறது. அந்த வகையில், கொரோனா வைரஸிற்கு மருந்து என கூறி லண்டனை சேர்ந்த ஒரு தாய் மற்றும் அவரது மகன் இருவரும் தங்கள் சொந்த சிறுநீரை நான்கு நாட்களாக குடித்து வந்துள்ளனர்.

இந்த தகவல் எப்படியே அதிகாரிகளுக்கு தெரியவர, அவர்கள் குறிப்பிட்ட தாய் மற்றும் மகனை அழைத்து விசாரித்தபோது, அவர்களின் சொந்தக்காரர் ஒருவர் வாட்ஸப்பில் அனுப்பிய வீடியோவை நம்பி இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.